PUBLISHED ON : டிச 21, 2019

எனக்கு, 60 வயதாகிறது; சிறுவர்மலர் வெளியான நாள் முதல் படித்து வருகிறேன். இப்போது, 'இளஸ்... மனஸ்...' பகுதியை விரும்பி படிக்கிறேன். சிறுகதை, படக்கதை, புதிர், மொக்க ஜோக்ஸ், உங்கள் பக்கம், அங்குராசு என, அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை.
குழந்தைகளை ஆனந்தப்படுத்தும், குட்டி குட்டி மலர்கள், அட்டைப் படம் போன்றவற்றையும் வெகுவாக ரசிக்கிறோம். என் பேத்தியின் புகைப்படமும் இந்த பகுதிகளில் பிரசுரமாகியுள்ளது. அப்போது குடும்பமே ஆனந்த கடலில் மூழ்கியது. அந்த இதழ்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளோம்.
புதிர் போட்டியில் பலமுறை பரிசுகள் பெற்றுள்ளேன். சிறுவர்மலர் இதழுக்கு ஈடாக எந்த பத்திரிகையும் இல்லை; இந்த மலரை படித்தால் எந்த வயதிலும் பாலகர்களாக இருக்கலாம்.
என் குடும்பத்தினரை மட்டுமல்லாது, அக்கம் பக்கத்தவரையும் படிக்க வலியுறுத்தி வருகிறேன். வாசிப்போரை சுறுசுறுப்பாக்கும் ஒப்பற்ற மாமருந்து சிறுவர்மலர்.
- கே.இசக்கிமுத்து, திருப்பூர்.
