PUBLISHED ON : ஜன 04, 2020

என் வயது, 38; தினமலர் நாளிதழ் வாசித்த பின் தான், தினமும் வீட்டு வேலையை துவங்குகிறேன். திருமணமான நாள் முதல் இதை கடைபிடித்து வருகிறேன்.
சிறுவர்மலர் இதழில், குட்டி குட்டி மலர்கள், அதிமேதாவி அங்குராசு, உங்கள் பக்கம், இளஸ் மனஸ் என, அனைத்தும் விருப்பமான பகுதிகள்.
'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' பகுதியில் வரும் உணவு வகைகளை, என் குழந்தைகள் விரும்பி கேட்பர். மனம் கோணாமல் தயாரித்துக் கொடுப்பேன்; அதில் வரும் அறக் கருத்துக்களையும் எடுத்துரைப்பேன்.
சிறுவர்மலர் இதழ் அட்டை மற்றும் குட்டி குட்டி மலர்கள் பகுதிகளில் என் குழந்தைகளின் படங்கள் இடம் பெற்றுள்ளன; அவையெல்லாம், மறக்க முடியாத தருணங்கள்.
கோடை விடுமுறை, 'சம்மர் ஸ்பெஷல்' இதழில் அறிவிக்கும் போட்டிகளைப் பார்த்ததும், போட்டி போட்டு விடை கண்டுபிடிப்பர் என் குழந்தைகள். அவர்களின் ஆர்வம் வியப்பு ஏற்படுத்தும். அந்த இதழ்களை எல்லாம் தொகுத்து வைத்துள்ளேன்.
சிறுவர்மலர் இதழ் மேலும் அழகாக மலர வாழ்த்துகிறேன்.
- டி.லட்சுமிபிரியா, திருப்பூர்.
