PUBLISHED ON : ஜன 18, 2020

என் வயது, 64; தமிழக அரசு பதிவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவன்.
சிறுவர்மலர் இதழை எப்போதும் வைத்திருப்பேன். அதில் உள்ள கதைகளை, என்னை தேடி வரும், சிறுவர், சிறுமியருக்கு, படித்துக்காட்டி உற்சாகமூட்டுவேன். கற்பனை கலந்து கதைகள் சொல்ல அவர்களை துாண்டுவேன்.
கற்பனைத் திறன் வளர்வதால், சிறுவர்களின் பழகும் தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவர்மலர் இதழை, தொடர்ந்து வாசிப்பதால், படிப்புத்திறனும் மேம்பட்டுவருகிறது.
பொது அறிவைத் தரும், 'அதிமேதாவி அங்குராசு' பகுதி தகவல்களை எடுத்துச் சொல்லி புரிய வைப்பேன்.
சமீபகாலமாக, ஆங்கிலத்துக்கு ஈடாக, புதிய தமிழ் சொற்கள், இந்த பகுதியில் அறிமுகமாகி வருகின்றன. அவை, சிறப்பாக உள்ளதால் விளக்கி, பிழையின்றி உச்சரிக்க பயிற்சி தருகிறேன். சிறப்பாக வாசிப்போருக்கு, சிறு சிறு பரிசுகள் தந்து ஊக்குவிக்கிறேன்.
நான் குடியிருக்கும் பகுதியில், 'சிறுவர்மலர் தாத்தா' என்றே என்னை அழைக்கின்றனர். தொடர்ந்து வாசித்து வரும் சிறுவர்கள், 'வீ டூ லவ் சிறுவர்மலர்' என்று கூற ஆரம்பித்து விட்டனர்.
- டி.கே.ஹரிஹரன், மதுரை.
தொடர்புக்கு: 98416 13494
