தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : மே 30, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுவர்மலர் இதழ் வெளியான நாள் முதல், தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு பகுதியும் புதுமைப் பொலிவுடன் விளங்குகிறது.

மலரும் நினைவை, 'ஸ்கூல் கேம்பஸ்' தருகிறது. சிரித்து மகிழ, 'மொக்க ஜோக்ஸ்' பகுதி. புதிதாக சுவைக்க, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' சமையல் உதவுகிறது. சிந்தித்து செயல்பட, 'புதிர் விடை' பயன்படுகிறது.

பொது அறிவை, 'அதிமேதாவி அங்குராசு' வளர்க்கிறது. சிறுவர், சிறுமியரை மகிழ வைக்கும் சிறுகதைகள், குழந்தைகளை ஆர்ப்பரிக்க வைக்கும், 'குட்டி குட்டி மலர்கள்' என, பக்கத்துக்கு பக்கம் பயன் மிக்கதாக மலர்ந்து, மணம் வீசுகிறது.

சிறுவர்மலர் இதழை படிக்கும் போது, பணிச்சுமை, குடும்ப கவலைகளை மறந்து, சிறுமியாக மாறி, இன்பக்கடலில் நீந்தி மகிழ்கிறேன். சிறியவர் முதல், பெரியவர் வரை படிப்பதற்கு உகந்த கலைக்களஞ்சியமாக திகழ்கிறது. பணி தொடரட்டும்; இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!

- ரா.கீதாலட்சுமி, உளுந்துார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us