PUBLISHED ON : ஆக 22, 2020

என் வயது, 83;
ஆரம்ப பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
பணி காலத்தில், மதிய உணவு இடைவேளையின் போது, மாணவர்களை அரங்கத்தில் அமர வைத்து, சிறுவர்மலர் இதழில் வெளிவரும் சிறுகதைகளைக் கூறுவேன். அவற்றில் வரும் பாத்திரங்களை போல் நடிக்கவும் பயிற்சி அளிப்பேன். கற்பனையாக கதைகள் புனையவும் துாண்டுவேன்.
இந்த செயல்பாட்டால், மாணவர்களின் அறிவும், நினைவாற்றலும் வளர்வதைக் கண்டேன்.
சிறுவர்மலர் இதழில் வரும் ஓவியங்களை காட்டி, 'விரும்பியபடி வரையலாம்...' என்பேன். போட்டி போட்டு வரைவர். சிறந்தவற்றுக்கு, பரிசு வழங்கி பாராட்டுவேன். இதனால், மாணவ, மாணவியரிடம் கற்பனை திறன் வளர்வதை காண முடிந்தது.
மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்ததுடன், முன் மாதிரியாகவும், வழிகாட்டியாவும் இருந்துள்ளேன். என்னிடம் படித்தவர்கள், அரசில் கல்வி, போலீஸ் என பலதுறைகளில் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.
ஆசிரியர் என்றால், குற்றமற்றவர் என பொருள். அதற்கு ஏற்ப வாழ்ந்து, வல்லவர்களை உருவாகியுள்ளதை எண்ணி மகிழ்கிறேன்.
- கே.வீரையன், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 80568 24370
