PUBLISHED ON : நவ 14, 2020

அ நிறம் | அளவு
என் வயது, 71; சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக சுவாசிக்கும் வாசகி.
நீதிக்கதைகள், பொது அறிவு கட்டுரைகள், படக்கதைகள் என அனைத்தும் ஈர்ப்பு தரும்.
குழந்தைப் பருவம் முதலே என் பேத்தியும் விரும்பிப் படித்து வருகிறாள். இப்போது, 10ம் வகுப்பிலும் மிக சுவாரசியமாக படிக்கிறாள். பொது அறிவு, 'புதிர்!' போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் பெறுகிறாள்.
அறிவியல் தகவல், சிறுகதைகள் நல்ல பண்பை வளர்க்கின்றன; சிறுவர்களின் ஓவியம் மற்றவர்களை ஊக்குவிக்கிறது.
அனைவரும் படிக்கும் வகையில் உள்ளது சிறுவர்மலர். அனைவர் இதயத்திலும் பதிந்துள்ளது என்றால் மிகையாகாது. வாசிப்பு பழக்கத்தை எனக்குள் உருவாக்கிய சிறுவர்மலர் இதழுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
- இல.வள்ளிமயில், மதுரை.
