
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 45; ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றினார் தந்தை. இதனால், சிறு வயது முதலே சிறுவர்மலர் இதழைப் படித்து வருகிறேன். பிறந்த வீட்டில் துவங்கி, புகுந்த வீட்டிலும் தொடர்கிறேன். மகிழச்சியாக வாழ்கிறேன்.
அறிவியல் கட்டுரை, சிறுகதை, மினி தொடர், மொக்க ஜோக்ஸ், ஸ்கூல் கேம்பஸ், அதிமேதாவி அங்குராசு போன்ற பகுதிகள் சிறப்பானவை. பொது அறிவை வளர்க்கின்றன. பலமுறை, 'புதிர்!' போட்டியில் பரிசுகள் பெற்றுள்ளேன். என் மகன்கள், ஹரி, ராகவ், வகுப்புகளில் தமிழ் பாடத்தில் எப்போதும் முதலிடம்தான். காரணம், சிறுவர்மலர் தான்.
படித்த பின், பழைய பேப்பர் கடைக்கு போடும் புத்தகம் அல்ல சிறுவர்மலர்; பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம். திறமைக்கும், வளர்ச்சிக்கும் முதலிடம் தரும் இதழ் வாழ்க!
- கே.ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி

