
என் வயது, 74; அரசு உயர்நிலைப் பள்ளியில், ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணியின் போது நீதி போதனை வகுப்புகளையும் நடத்தியது உண்டு. அந்த பாடவேளைகளை சிறப்பாக நடத்த உதவியது, சிறுவர்மலர் இதழ்.
மாணவர்களுக்கு பயன்படும், கதை மற்றும் குறிப்புகளை தயாரிக்க மிகவும் துணையாக இருந்தது. என் வகுப்பை மாணவர்கள் மிக மகிழ்ச்சியுடன் கவனிப்பர். அடுத்த நீதிபோதனை வகுப்பு வரும் நாளுக்காக, ஆவலுடன் காத்திருப்பர்.
ஓய்வு பெற்றுள்ள நிலையில், பேரன், பேத்தியருக்கு, கதைகள், தமாசு, அங்குராசுவின் தகவல்களை படித்து சொல்லிவருகிறேன். மிகவும் மகிழ்ந்து ஆர்வமுடன் கேட்கின்றனர். அவை, நல்வழிப்படுத்துகின்றன. சிறுவர்மலர் எப்போது வரும் என்று, ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
முதுமையில் ஏற்படும் தனிமையை விரட்டி மகிழ்ச்சி தரும் சிறுவர்மலர் இதழை மனதார பாராட்டுகிறேன்!
- சா.சிசுபாலன், மதுரை.
தொடர்புக்கு: 90952 29334.

