
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 70; அரசு கருவூல கணக்கு துறையில், கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழ் படித்து மெய்சிலிர்க்கிறேன். அதில் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி, பள்ளிக்கால அனுபவங்களில் ஊஞ்சலாட வைக்கிறது; எல்லா பகுதிகளும் காந்தம் போல் இழுக்கின்றன.வீட்டிற்கு, தினமலர் நாளிதழ் வாங்கி வந்ததும், என் பேரன், பேத்தியர் ஓடி வருவர். கையிலிருக்கும் சிறுவர்மலர் இதழைப் பறித்து, 'உங்கள் பக்கம்!' பகுதியில் வரும் ஓவியங்களைப் பார்த்து வரைந்து பழகுவர். அதை பார்க்கும் போது மனம் குளிர்கிறது. தங்களுக்கு, 'ராயல் சல்யூட்!' போட வைக்கிறது. - முகம்மது சவுக்கத் அலி, சென்னை.

