PUBLISHED ON : ஜூலை 03, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 85; விருத்தாசலம் வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பல ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை ஆவலுடன் படித்து வருகிறேன்.
எனக்கு, மூன்று குழந்தைகள்; அனைவரும் சிறுவர்மலர் இதழை எதிர்பார்த்து வாசலிலேயே காத்துக் கிடப்பர். வந்ததும் போட்டி போட்டு கதை, கட்டுரைகளை பார்ப்பர். நானும் அவர்களுடன் போட்டி போடுவேன். அங்குராசுவின் கட்டுரை மிகவும் கவர்ந்துள்ளது.
என் பேரக்குழந்தைகளும், சிறுவர்மலர் இதழ் வாசிப்பில் பைத்தியமாகிவிட்டனர்.
மீண்டும் மீண்டும் படித்தாலும், அலுப்பே தராத தகவல் பெட்டகம் சிறுவர்மலர். இது மறுக்க முடியாத உண்மை!
- சி.அக்கினி, மதுரை.
தொடர்புக்கு: 83088 29725

