
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
ஏலக்காய் பொடி, உப்பு - சிறிதளவு
சர்க்கரை, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவை, இளம் சூட்டில் வறுத்து ஆற விடவும். அதில், உப்பு, தண்ணீர், ஏலக்காய்பொடி கலந்து, புட்டு மாவு பதமாக்கவும். புட்டுக் குழலில், தேங்காய் துருவல் போட்டு, அதன் மீது பதமாக்கிய மாவை, முறையாகப் போட்டு, நீராவியில் வேகவைக்கவும். சுவைமிக்க, 'கோதுமை புட்டு' தயார்.
தேவைக்கேற்ப சர்க்கரை, வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாம். அனைவரும் விரும்புவர்.
- ர.அனுசுயா தேவி, கோவை.
தொடர்புக்கு: 97868 52286

