
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 59; இல்லத்தரசியாக உள்ளேன். சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகி. என் மகன் வரைந்த படம், 'உங்கள் பக்கம்!' பகுதியில், 1990ல் வெளியானது; அடுத்து, பேரன் வரைந்த படம், 2020ல் வந்துள்ளது. இவை மகிழ்ச்சி தருகின்றன.
'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் வெளியாகும் கடிதங்கள், பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் செல்கின்றன. அப்போதைய நினைவை துாண்டி மகிழ்ச்சி தருகிறது.
சிறுவர்களை, ஓவியம் வரையத் துாண்டுகிறது, 'உங்கள் பக்கம்!' பகுதி. பெண்களை சமையல் கலையில் வல்லுனர் ஆக்குகிறது, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி.
இது மட்டுமா... அனைத்துப் படைப்புகளுக்கும் தாய் வீட்டு சீதனம் போல், உரிய சன்மானமாக பணம் வருகிறது; கரும்பு தின்ன கூலியும் தரும், 'சிறுவர்மலர்' இதழை படிக்கும் போது, மனம் லேசாகிறது!
- வெ.தேவகி ராமன், தேனி

