PUBLISHED ON : அக் 30, 2021

என் வயது, 65; சிறுவர்மலர் இதழை, 30 ஆண்டுகளாக வாசிக்கிறேன்; ஒவ்வொரு வாரமும் எப்போது மலரும் என ஆவலுடன் காத்திருப்பேன்.
நான், 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன்; சிறு வயதில் சரியாக வாசிக்கத் தெரியாது; தினமலர் நாளிதழ் படித்துதான் வாசிக்க கற்றுக்கொண்டேன்.
சிறுவர்மலர் இதழில் வரும் நீதிக்கதைகள், பொது அறிவுக்கட்டுரைகள் என, அனைத்தும் அருமை! சிரிப்பு தரும், 'மொக்க ஜோக்ஸ்!' படிக்கும் போது லேசாகிறது மனம்.
என் ஆசிரியர்கள், வகுப்பு தோழியரை நினைவு படுத்துகிறது 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. நல்ல அறிவுரை தருகிறது, 'இளஸ் மனஸ்!' பகுதி.
சிறுவர்மலர் இதழுக்கு கடிதம் எழுத பல ஆண்டுகளாக ஆசைப்பட்டேன்! முறையாக எழுத வராததால் விட்டு விட்டேன். தற்போது, பேரன், பேத்தி உதவியுடன் எழுதி அனுப்புகிறேன். அவர்களும் சிறுவர்மலர் வாசிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்; போட்டிகளில் பங்கு பெறுகின்றனர்.
சிறுவர்மலர் இதழ், மென்மேலும் மலர்ந்து மணம் வீச வாழ்த்துகள்!
- என்.ஜெயலட்சுமி, சென்னை.
