தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : டிச 04, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 51; சிறு வயது முதல், மீன் பிடித்தொழில் செய்து வருகிறேன். சிறுவர்மலர் இதழில் மிகவும் பிடித்தது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி தான்; அதை படிக்கும் போதெல்லாம், 'ஆசிரியர் சொல் கேட்டு பள்ளிப் படிப்பை தொடர்ந்திருந்தால், அரசுப்பணிக்கு சென்றிருக்கலாமே' என தோன்றும்.

வலையில் மீன் சிக்காமல் கவலையுடன் கரை திரும்பும் போது, 'மொக்க ஜோக்ஸ்!' வாசித்து தேற்றிக்கொள்வேன். சிறுகதைகளை படிக்கும் போது, வாழ்க்கையில் மட்டுமின்றி, தொழிலிலும் நேர்மை அவசியம் என்பதை உணர்வேன்.

அங்குராசுவின், அறிவியல் செய்திகள், பொதுஅறிவுத்தேடலுக்கு வழிகாட்டியாக உள்ளன. பெரியோரும் பெரிதும் நேசிப்பதை, 'வீ டூ லவ் சிறுவர்மலர்!' பகுதி உறுதிப்படுத்துகிறது. குடும்பத்தில் அனைவரும் சிறுவர்மலர் இதழுடன் நெருங்கி நட்பு பாராட்டி வருகிறோம்.

இளைய மகள், 'உங்கள் பக்கம்!' பகுதி மூலம், நன்றாக ஓவியம் கற்றுள்ளார். மீன்பிடி தொழில் சரியாக அமையாத காலத்தில், சிறுவர்மலர் மூலம் கிடைக்கும் பரிசுத் தொகையே, என் குடும்பம் பசியாற உதவியுள்ளது.

என் போன்ற ஏழை வாசகர்களுக்கு, ஆறுதலாக விளங்கி வரும் சிறுவர்மலர் இதழை வணங்கி வாழ்த்துகிறேன்!

- மு.சம்சுகனி, துாத்துக்குடி.

தொடர்புக்கு: 96005 89075

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us