PUBLISHED ON : மார் 12, 2022

அ நிறம் | அளவு
என் வயது, 37; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகன். இதில் வரும், 'புதிர்!' போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றது தான் என் வாழ்வில் முதல் நம்பிக்கை. தொடர்ந்து நான் எழுதிய அனுபவக் கட்டுரை, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் வெளியானது.
இதையடுத்து, உடன் பணிபுரிபவர்கள், 'இளம் எழுத்தாளர்' என, வர்ணித்து என்னை பெருமைப்படுத்தினர். அடுத்தடுத்து, அனுபவ கட்டுரைகள் பிரசுரமானதால், மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன்.
வாரந்தோறும், 'உங்கள் பக்கம்!' பகுதியில் வெளியாகும் ஓவியங்களை சிறுவர்களிடம் காட்டி அவர்களையும் அதுபோல் வரையத் துாண்டி வருகிறேன். என்றும், சிறுவர்மலர் இதழின் பற்றாளனாக இருப்பேன்.
- ரா.ராஜ்மோகன், விழுப்புரம்.
