PUBLISHED ON : மார் 19, 2022

அ நிறம் | அளவு
என் வயது, 51; சிறுவர்மலர் இதழில், ஒவ்வொரு பக்கத்தையும் விடாமல் படித்து வருகிறேன்.
என் பிள்ளைகள், 'குழந்தை போல ரசித்து ரசித்து படிக்கிறார்; எப்பத்தான் நமக்கு கொடுப்பாரோ' என, காத்திருந்து தவித்ததை இன்றும் கதை போல் கூறுவது உண்டு.
சிறுவர்மலர் இதழில் நல்ல விஷயங்கள் நிறைய இடம் பெறுகின்றன; தெரிந்து கொண்ட தகவல்கள் ஏராளம். படித்ததை நண்பர்களுக்கும் பகிர்கிறேன்.
பின் அட்டையில், குழந்தைகளின் புகைப்படங்களை காணும் போது பொறாமையாக இருக்கும். குழந்தையாக இருந்தபோது, அந்த பகுதியில் என் படம் இடம் பெற முடியாமல் போனதை எண்ணி வருந்துவேன். இப்போதைய படங்களை ரசித்து பூரிப்படைவேன்.
குட்டி குட்டி மலர்களை மலர செய்யும் சிறுவர்மலர் இதழுக்கு, கோடான கோடி வாழ்த்துகள்!
- பி.கண்ணன், மதுரை.
தொடர்புக்கு: 90422 43540
