
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 57; நாளிதழ் இணைப்புகளில் தனித்தன்மையுடன் திகழ்கிறது, சிறுவர்மலர். குறிப்பாக, சிறுவர், சிறுமியருக்கு மட்டுமின்றி, பெரியோரையும் கவர்ந்துள்ளது. வாசிக்க துவங்கிய நாள் முதல், துளியும் ஆர்வம் குறையவில்லை.
புள்ளிகளை இணைத்து, ஓவியம் வரைவதிலும், புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் உள்ள ஆர்வம் இன்றும் தொடர்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்திழுப்பதில் தனித்துவம் பெற்றுள்ளது சிறுவர்மலர்.
தற்போது, பேரன், பேத்தியர் கைகளுக்கு சென்று விடுவதால், படிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவே தனி சுகமாக உள்ளது. எல்லா வயதினரையும் கவரும் அருமையான இதழ் சிறுவர்மலர். தொடரட்டும் அதன் சிறந்த சேவை!
- க.கணேசன், திருநெல்வேலி.
தொடர்புக்கு: 96291 95115