PUBLISHED ON : அக் 15, 2022

அ நிறம் | அளவு
என் வயது, 65; தினமலர் இதழை, 1989 முதல் வாசித்து வருகிறேன். குடும்பத்தில் அனைவரும் சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகர்கள். பரிசு மழை போட்டியில் பரிசுகள் பெற்றுள்ளேன். என் புகைப்படமும் பிரசுரம் ஆகியுள்ளது.
சிறுவர்மலர் இதழுக்கு படங்கள் வரையச் சொல்லி, பேரன்களை உற்சாகப்படுத்துவேன்.
என் மனைவியும், மகளும், மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன் பகுதியில், ஆக்கங்கள் எழுதி, பரிசுகள் வாங்கியுள்ளனர். ஸ்கூல் கேம்பஸ், இளஸ்...மனஸ்... அறிவுரைகள் மிக பயனுள்ளதாக உள்ளன.
சிறுவர், சிறுமியருக்கு அதிகமாக பரிசுகளை அள்ளி தருவது, சிறுவர்மலர் இதழ் மட்டும் தான்.
மொத்தத்தில் சிறுவர்மலர், சிறப்பான அறிவு மலர்!
- பி.தாமஸ், விருதுநகர்.
