
என் வயது, 59; சொந்தமாக சிற்றுண்டி கடை நடத்தி வருகிறேன். தினமலர் நாளிதழை, 25 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். அனைத்து தரப்பினரின் அபிமானம் பெற்றுள்ள, சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகன்.
பள்ளி கால நினைவை உயிரூட்டும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, சிறுவர்களை குஷிப்படுத்தும் சித்திர கதை, நீதி சொல்லும் சிறுகதைகள் சிறப்பாக உள்ளன.
குழந்தைகளின் ஓவியத் திறமையை வளர்க்கும் களமாக திகழ்கிறது, 'உங்கள் பக்கம்!' பகுதி.
புதிர் போட்டி, குட்டி குட்டி மலர்கள் பகுதியை அலங்கரிக்கும் அரும்புகளின் புகைப்படங்கள் அருமையாக உள்ளன.
சஞ்சலம் போக்கும், 'இளஸ்... மனஸ்...' ஆலோசனை பகுதி, அறிவார்ந்த அம்சங்களை தாங்கி வருகிறது, அங்குராசுவின் கட்டுரை.
புத்தகம், அறிவை செதுக்கும் உளி என்ற பொன்மொழிக்கு ஏற்ப, அனைத்து தரப்பு வாசகர்களின் இதய மலராக மணம் வீசும் சிறுவர்மலர், சிந்தனையை சீர்ப்படுத்துகிறது. அது மேலும் வளர்ந்து, புகழின் சிகரம் தொட மனமார்ந்த வாழ்த்துகள்.
- எஸ்.ராஜமோகன், விருதுநகர்.
தொடர்புக்கு: 82202 12189

