PUBLISHED ON : பிப் 18, 2023

என் வயது, 64; அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவயதில் இருந்தே வாசிக்கும் பழக்கத்தை நேசிக்கிறேன். நீண்ட காலமாக தினமலர் நாளிதழ் வாசகன். அதன் இணைப்பான சிறுவர்மலர் இதழுக்கு இதயத்தை பறி கொடுத்துள்ளேன்.
எதுவும், சில நாட்களில் சலிப்பை ஏற்படுத்தி விடும். ஆனால், என்றும் சலிப்பை ஏற்படுத்தாமல், எப்போதும் ஆவல் ஏற்படுத்தும் சிறுவர்மலர் இதழில் ஒரு பக்கத்தை கூட விடாமல் முழுமையாக படிப்பேன்.
தனித்திறன் மிக்க கட்டுரைகளால், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதி, மனதில் தங்கும் ராசாவாக அமர்ந்துள்ளார். சிறுகதைகள் நல்ல படிப்பினை தருகின்றன. சிறுவர்மலர் இதழில் தனி முத்திரை பதிக்கிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. தமாசுகள் ஒவ்வொன்றும், சிரிக்காதவர்களையும் சிரிக்க வைக்கிறது.
எல்லா தரப்பு வாசகர்கள் நெஞ்சில், தனி இடம் பிடித்து, கோலோச்சி கொண்டிருக்கும் சிறுவர்மலர் வளர்ச்சி நாளும் பெருகிட நல்வாழ்த்துகள்!
- அ.ராஜா ரகுமான், தேனி.