PUBLISHED ON : பிப் 25, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 70; பள்ளியில், 3ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விபரம் தெரிந்த நாள் முதல், குடும்பத்தில் தினமலர் நாளிதழ் வாங்கி படிக்கிறோம். குறிப்பாக, சிறுவர்மலர் இதழில் வெளிவரும் ஆக்கங்களை சேகரித்து, பாதுகாப்பாக வைத்துள்ளேன்.
என் இரண்டு பேத்தியருக்கும், சிறுவர்மலர் வாசிக்க பயிற்சி கொடுத்தேன். அதனால், பள்ளி நேரம் தவிர, கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், துணுக்குச்செய்தி, புதிர் போட்டி என பலவற்றையும் எழுதி, பரிசுகளை வென்றுள்ளனர்.
இதற்கு சிறுவர்மலர் இதழ், துாண்டு கோலாக இருக்கிறது. சிறுவர் முதல், பெரியோர் வரை, அறிவுப் பொக்கிஷத்தை அள்ளிக் கொடுக்கும் அமுதசுரபியாக விளங்குகிறது சிறுவர்மலர் இதழ்.
- பா.சரஸ்வதி, திருப்பூர்.