PUBLISHED ON : ஜூலை 01, 2023

என் வயது, 58; அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றுகிறேன். சிறுவர்மலர் இதழை தவறாமல் விரும்பிப் படிக்கிறேன். கவிதை, கதை, பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
'டிவி' போன்ற காட்சி ஊடகங்களை தவிர்த்து, நுாலகம் செல்ல மாணவர்களை வழிப்படுத்துகிறேன்.
சிறுவர்மலர் இதழில் குறிப்பாக, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் வரும் நிகழ்வுகள், பள்ளிப்பருவத்தை நினைவுப்படுத்துகின்றன. பால்ய காலத்தை அசைப்போட வைக்கிறது. இதில் பிரசுரமாகும் நீதிக்கதைகளை, மாணவ, மாணவியருக்கு சொல்கிறேன். அதிலும், 'இளஸ்... மனஸ்...' பகுதியில் வரும் கருத்துக்களை, மாணவர் பேரவை கூட்டங்களில் எடுத்து சொல்கிறேன். அது, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறது.
பேருந்து பயணங்களில் உற்ற துணைவனாக சிறுவர்மலர் இடம்பிடிக்கிறது. குழந்தைகளை குதுாகலப்படுத்தும், 'உங்கள் பக்கம்!' பகுதியும், படக்கதையும் சிறந்த குழந்தைமலர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்துகிறது. பயனுள்ள வகையில் பொழுதை பயன்படுத்த வழி காட்டுகிறது, சிறுவர்மலர் இதழ்.
- ம.கணேசன், புதுச்சேரி.
தொடர்புக்கு: 94889 27434
