PUBLISHED ON : ஜூலை 15, 2023

என் வயது, 69; இல்லத்தரசியாக இருக்கிறேன். தொடர்ந்து, 30 ஆண்டுகள் தினமலர் நாளிதழ் படித்து வருகிறேன். தற்போது, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மகனுடன் வசிக்கிறேன். பேரன் அர்ஜூனுக்கு, 10 வயதாகிறது; பெங்களூருவில் பிறந்து, இங்கேயே படிக்கிறான்.
அவனுக்கு, தாய்மொழியாம் தமிழில் பேசும் திறன் மட்டுமே இருந்தது. எழுதி, வாசிக்கும் திறனை வளர்க்க, சிறுவர்மலர் இதழை பயன்படுத்துகிறேன். அதன் உதவியால் தமிழில் எழுத, படிக்க கற்று வருகிறான். தற்போது, எழுத்துக் கூட்டி சிறப்பாக வாசிக்கிறான்.
சிறுவர்மலர் இதழில் வெளிவரும் சிறுகதைகள், ஸ்கூல் கேம்பஸ் பகுதி அனுபவங்கள், மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன் சமையல் பகுதி உணவுகள் மிகவும் பிடிக்கும்.
என் பேரனுக்கு, தமிழை எளிமையாக கற்றுத்தர பயன்படும் சிறுவர்மலர் இதழுக்கு உளங்கனிந்த நன்றிகள்!
- வி.மதுரம், பெங்களூரு.
தொடர்புக்கு: 87928 70591
