PUBLISHED ON : ஜூலை 22, 2023

அ நிறம் | அளவு
என் வயது, 71; தெம்பும், நம்பிக்கையும் ஊட்டும் சிறுவர்மலர் இதழை கற்பதால், தெளிவுடன் வாழ்கிறேன். எழுச்சி பெற்று உயர்வதற்கான வழிமுறைகளை அனைவருக்கும் தருகிறது. வற்றாத வெற்றிக்கு வழி காட்டுகிறது.
உலகின் மாபெரும் தலைவர்கள் காந்திஜி, லெனின், ஆப்ரகாம் லிங்கன் போன்ற பலரின் மேன்மையான தொண்டுள்ளம் நிறைந்த வாழ்க்கை வரலாறை சுருக்கமாக தருகிறது. இது, புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. பயனுள்ள படைப்புகளை எளிமையாக தந்து வெற்றி நடை போடும், சிறுவர்மலர் இதழை என்றென்றும் துதிக்கிறேன்.
பெருந்தகையோர், பள்ளி ஆசிரியர்களை செங்கோல் போல் நின்று காக்கிறது. சிந்திக்கும் திறனை உயர்த்தி உலகம் மேன்மையுற தொடர்ந்து பணி செய்யும் சிறுவர்மலர் இதழ் எங்கெங்கும் புகழ் பரப்ப பெருமிதத்துடன் வேண்டுகிறேன்.
- அ.முத்துராமு, மதுரை.
தொடர்புக்கு: 93609 06167
