
என் வயது, 60; அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். நீண்ட காலமாக சிறுவர்மலர் இதழை படிக்கிறேன். வகுப்பறையில், எழுதப் படிக்க தெரியாத மாணவர்கள் பலர் இருந்தனர்; அவர்களுக்கு, எழுத்துக் கூட்டிப் படிக்கும் பயிற்சி அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.
அதற்காக முதலில் பாடப்புத்தகம் பயன்படுத்தினோம். அது வழக்கமாக இருப்பது தானே... அதனால், ஆர்வம் குன்றி இருந்தனர். எனவே, புதுமையாக, எளிமையாக, படங்களுடன் சிறுவர்கள் வாசிக்கும் வகையில் ஏதாவது இருந்தால் சிறப்பாக இருக்கும் என யோசித்தேன்.
அதற்கு விடை தந்தது, சிறுவர்மலர் இதழ்; அதை பயன்படுத்தி வாசிப்பு பயிற்சி அளித்தேன்; நல்ல பலன் தந்தது. வகுப்பறையில் வாசிக்க தெரியாத மாணவர்களே கிடையாது என்ற நிலை ஏற்பட்டது. கதைகள், தமாசுகள், படங்கள், கட்டுரைகள் என படித்து ரசிப்பதை வழக்கமாக்கி விட்டனர் மாணவர்கள். அவர்கள் கையில், சிறுவர்மலர் இதழ் தவழ்வதை கண்டு அகம் மகிழ்கிறேன்!
- தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்.
தொடர்புக்கு: 94433 94747

