PUBLISHED ON : அக் 28, 2023

என் வயது 57; இல்லத்தரசியாக இருக்கிறேன். குடும்பத்தில், 25 ஆண்டுகளாக, தினமலர் நாளிதழ் படித்து வருகிறோம். சனிக்கிழமை வந்தாலே, சிறுவர்மலர் இதழை பார்த்து மனம் குதுாகலிக்கும்.
இதில், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியை படிக்கும் போது, 'என்னுடன் பள்ளியில் பயின்றவர்கள் எழுதியதா...' என தேடிப் பார்ப்பேன். சிறுகதை, அதிமேதாவி அங்குராசு, படக்கதை, மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன், மொக்க ஜோக்ஸ், இளஸ்... மனஸ்... என, அனைத்து பகுதிகளும் சுவாரசியம் தருகின்றன.
படம் வரைவதில் ஆர்வம் உள்ளதால், 'உங்கள் பக்கம்!' பகுதியை பார்க்கும் போது, 'குழந்தையாக இருந்தால், இதில் கலந்து கொள்ளலாமே...' என்று தோன்றும். அதில் வரும் ஓவியங்களை பார்த்து, மூன்று வயதாகும் என் பேத்திக்கு படம் வரைய கற்றுக் கொடுக்கிறேன்.
'வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போய் விடுமோ' என்று அஞ்சும் காலத்தில், அனைத்து வயதினரையும் படிக்கும் ஆர்வத்தை துாண்டும் சிறுவர்மலர் இதழ், மல்லிகை செண்டாக தொடர்ந்து வாசம் பரப்ப வாழ்த்துகிறேன்.
- ஜெயந்தி சந்திரசேகரன், சென்னை.
