தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (221)

இளஸ் மனஸ்! (221)

இளஸ் மனஸ்! (221)


PUBLISHED ON : அக் 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா...

என் வயது, 17; அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படிக்கும் மாணவி. படிப்பை முடித்த பின், ஏதாவது பத்திரிகையில் குறிப்பாக, சிறுவர் இதழில், ஆசிரியர் குழுவில் பணிபுரிய ஆசைப்படுகிறேன். அதற்கான தகுதிகளும், வழிமுறைகளும் என்னென்ன என்பதை, விரிவாக கூறுங்கள்.

இப்படிக்கு,

மோ.தேவி.


அன்பு மகளுக்கு...

பொதுவாக, எந்த பத்திரிகையிலும், உதவி ஆசிரியையாக வேலை செய்ய தேவைப்படும், தகுதிக்குரிய, 13 அம்சங்களை அடுக்குகிறேன். நன்றாக நினைவில் பதித்துக்கொள்...

* ஆங்கிலத்தில் அல்லது தமிழில் இளங்கலை பட்டம் பெற்றியிருக்க வேண்டும். பத்திரிகையாளர் தேசிய சங்கமம் நடத்தும், இதழியல் பட்டய படிப்பில், தேர்ச்சி பெற்றிருந்தால் சிறப்பு

* நாள் தவறாமல், செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது போல், 'டிவி' அலைவரிசைகளில் செய்தி கேட்கும் பழக்கமும் இருப்பது நன்று

* புனைவு, அபுனைவுகளை வாசிப்பது கட்டாயம். சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினியில் பணி செய்யும் அறிவு தெரிந்திருந்தால் நல்லது. நகைச்சுவை உணர்வுக்கு முக்கியத்துவம் உண்டு

* சிறுவர் இலக்கியம், பரிட்சயம் தேவை. மேஜைக்கு வரும் கதை, கட்டுரை, துணுக்குகளை நகைச்சுவைகளை பெற்று அவற்றில் சிறப்பானதை தேர்ந்தெடுத்து, தேவைக்கு சுருக்கி, தொகுத்து, பிரித்து, மொழி பெயர்த்து, கத்திரித்து, தலைப்பிட்டு ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும்

* உதவி ஆசிரியருக்கு, துல்லியம், சுருக்கம், நிலைத்தன்மை, கருத்து, தனிப்பயனாக்கம் அவசியம்

* வார இதழில் பணிபுரிந்தால், ஒவ்வொரு வாரமும், குறிப்பிட்ட நாளைக்குள் குறிப்பிட்ட இதழை கொண்டு வரவேண்டி இருக்கும். இந்த பணியில் நேர நெருக்கடியும், மன அழுத்தமும் அதிகம்

* உனக்கான சம்பளம் பத்திரிகையை பொறுத்தது. பணிநேரம் தேவைக்கேற்ப நீளும்

* கண், காதுகளை திறந்து வைத்து, எதையும் கற்றுக்கொள்ள வேண்டும். எடிட்டர் எதையும் வெளிப்படையாக சொல்லி தர மாட்டார்

* ஆசிரியர், உதவி ஆசிரியர், எழுத்தாளர், கட்டுரையாளர் அனைவரும் ஒரே அலைவரிசையில் இயங்க வேண்டும்

* உதவி ஆசிரியர் பணிக்கு பெண்களே பொருத்தமானவர்கள். பெண்களுக்கு அர்பணிப்பு உணர்வு அதிகம். கவனச்சிதறல்கள் மிக மிக குறைவு

* சக உதவி ஆசிரியைகளிடம், சுமுகமான உறவு பாராட்ட வேண்டும்

* உதவி ஆசிரியை பணியை திருமணத்திற்கு பின்னும் தொடர குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்

* அனுபவம் வாய்ந்த உதவி ஆசிரியை நல்ல எழுத்தாளராக மாறுவார். எடிட்டர் ஆசியுடன், உன் பெயரிலும், மாற்று புனை பெயர்களிலும் நிறைய எழுதலாம். இந்த பணியில் சேர வேண்டுமானால் மானசீகமாக சிறுவர், சிறுமியருடன் புழுதியில் புரண்டு விளையாடு. அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செயல்படு; கரும்பலகைக்கு வெளியே நல்லாசிரியையாக திகழ வாழ்த்துகிறேன்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us