தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கூழைக்கடா!

கூழைக்கடா!

கூழைக்கடா!


PUBLISHED ON : அக் 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீர் பறவைகளில் மிகப் பெரியது கூழைக்கடா. பறவை இனத்தில், 'பெலிகேனிடே' என்ற குடும்பத்தை சேர்ந்தது. நன்றாக நீந்தும் திறன் உடையது.

பறக்கும் போது, நீரில் அல்லது நிலத்தில், தேவைக்கேற்ப ஓடி, விண் நோக்கி சாய்தளப் பாதையில் ஏறுகிறது. சமநிலைப்படுத்தியதும், எவ்வித தடுமாற்றமும் இன்றி சீராக சிறகடிக்கும். தலையை இரண்டு தோள்பட்டைகளுக்கு இடையில் இழுத்து வைத்துப் பறக்கும்.

நீர்நிலைகளை அடையும் போது நேர்கோட்டில் பறக்கும். நீரில் இறங்கும் போது வட்டமிட்டு அல்லது சாய்தளத்தில், சிறிது துாரம் ஓடி சறுக்கி இறங்கும்

பெரிய உடலும், சிறு கால்களும் உடையவை. தொங்கும் பை போன்ற தாடை அமைப்பு உள்ளது. மேல் அலகின் நுனி, கீழ் நோக்கி வளைந்திருக்கும். முன்பக்கம் கரண்டி போல அகன்றிருக்கும். காலின் நான்கு விரல்கள் ஜவ்வால் இணைக்கப்பட்டிருக்கும். இது, எளிதாக நீந்த உதவும்.

உடல் இறகுகள் வெள்ளை நிறம் உடையது. நீண்ட இறகுகள் கருப்பு நிறம். வாலும் கருப்பு நிறம். சதுர வடிவ தலையின் மேல், சிகரம் முடிச்சாக காணப்படும். இதன் எடையும், பரந்த உடல் அமைப்பும் பாதுகாப்பாக பறக்க உதவும்.

டிசம்பர் மாதத்தில், புளி, பனை மரங்களில் குச்சிகளால், பெரிய மேடை போன்ற கூடு கட்டும். அவை ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். அதில் மூன்று முட்டைகள் வரை இடும்.

ஆரம்பத்தில், வெள்ளை நிறத்தில் இருக்கும் முட்டைகள், நாளாக, நாளாக அழுக்கு நிறத்தில் மாறும். ஆணும், பெண்ணும் சேர்ந்து, 21 நாட்கள் அடை காக்கும்.

குஞ்சுகள் வெளிவந்த ஒரு வாரத்திற்கு பின் உணவூட்டும். அவை முழு வளர்ச்சி அடைய, ஓராண்டு காலமாகும்.

ஆசியா கண்ட பகுதியில் பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா என, பல நாடுகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. அண்டார்டிக்காவை தவிர, உலகின் மற்ற பகுதிகளில் காணப்படுகிறது.

- மு.நாகூர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us