PUBLISHED ON : நவ 11, 2023

என் வயது, 38; ஆசிரியையாக பணிபுரிகிறேன். குழந்தைப் பருவத்தில் கோடை விடுமுறை நாட்களில் என் தாத்தா வசித்த கிராமத்திற்கு செல்வது வழக்கம்! அப்போது தமிழ் எழுத்துக்கள் மட்டுமே படிக்க தெரியும்.
சிறு மளிகைக்கடை ஒன்று நடத்தி வந்தார் தாத்தா. அங்கு தினமலர் போன்ற இதழ்களை விற்பனைக்கு வைத்திருப்பார். அவரது வீட்டிலிருந்து, 1 கி.மீ., துாரத்தில் இருந்தது கடை. நடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் செல்லும் போது, சிறுவர்மலர் புத்தகத்தை கொடுத்து, எழுத்துக்கூட்டி படிக்க சொல்வார், தாத்தா. அதில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகளை படித்து, இரவு துாங்கப் போகும் முன் கூற வேண்டும் என்பார். இவ்வாறு வாசிக்கும் வழக்கம் வளர்ந்தது.
விடுமுறை காலம் முடிந்து, வீடு திரும்பிய பின்னும் சிறுவர்மலர் வாசிப்பதை தொடர்ந்தேன். படிக்கும் ஆர்வம் அதிகமாகியது. வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தேன். தொடக்கப்பள்ளியில் பணியாற்றுவதால் என் வகுப்பு மாணவ, மாணவியருக்கு சிறுவர்மலர் இதழை அறிமுகம் செய்து படிக்க வைப்பதை தவறாது செய்து வருகிறேன்.
- வே.சத்தியா, புதுச்சேரி.
தொடர்புக்கு: 96003 59724
