தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : டிச 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 74; துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.

குடும்பத்தில் அனைவரும் சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகர்கள். எப்போதும் சனிக்கிழமையை எதிர்பார்த்திருப்போம். இதழை படித்து முடித்த பின், பக்கத்து வீடுகளுக்கு கொடுப்போம்.

சிறுவர்மலர் இதழை படிப்பதால், வாசிப்புத்திறன் வளர்கிறது. கதைகள், கற்பனை திறனையும், ஒழுக்கத்தையும் வளர்க்கின்றன. போட்டிகள், சிந்தனை திறனை துாண்டுகிறது. வண்ண ஓவியங்கள், வரையும் திறனை தீட்டுகின்றன. ஆரோக்கிய சமையல், உடலுக்கு நலம் பயக்கிறது. சிரிக்க வைக்கும் தமாசுகள், மனதிற்கு உற்சாகம் தருகின்றன.

பள்ளி அனுபவ கடிதங்கள், அங்குராசுவின் அபூர்வ தகவல்கள், பிளாரன்சின் அன்பான ஆலோசனைகள் எல்லாம் துாள் பறக்கின்றன. வரலாறு, புவியியல், அறிவியல் சார்ந்த கட்டுரைகள், சிறுவர்மலர் இதழுக்கு சிறப்பு சேர்க்கின்றன.

அட்டையில் இடம் பெறும் குழந்தைகளின் வண்ணப் படங்கள் மேலும் மெருகு சேர்க்கிறது. ஒவ்வொரு வாரமும், புத்தம் புது கருத்துகளை வாரி வழங்கும் சிறுவர்மலர் இதழ், மேலும் புகழ்பெற இதய பூர்வமாக வாழ்த்துகிறேன்!



- கு.முருகேசன், திண்டுக்கல்.

தொடர்புக்கு: 97881 64573


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us