sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ்... மனஸ்...! (226)

/

இளஸ்... மனஸ்...! (226)

இளஸ்... மனஸ்...! (226)

இளஸ்... மனஸ்...! (226)


PUBLISHED ON : டிச 02, 2023

Google News

PUBLISHED ON : டிச 02, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...

என் வயது, 17; பிளஸ் 2 படிக்கும் மாணவி. குதிரை, கழுதை, கோவேறு கழுதை மூன்றுக்கும் இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை விளக்கவும்.

கழுதைப்பால் லிட்டர், 5,000 ரூபாய் என்கின்றனர். நான் படித்து முடித்ததும், கழுதை பண்ணை அமைத்து, கழுதைப்பால் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறேன்; என் திட்டம் சாத்தியம் தானா... சொல்லுங்கள் ஆன்டி.

இப்படிக்கு,

ரா.ராஜீவி பாலசண்முகம்.



அன்பு மகளுக்கு...

குதிரையின் விஞ்ஞானப் பெயர் ஈக்குவஸ் கேபலஸ். ஆயுட்காலம், 30 ஆண்டுகள்.

கழுதையின் விஞ்ஞானப் பெயர் ஈக்குவஸ் அசினஸ். ஆயுட்காலம், 40 ஆண்டுகள்.

கோவேறு கழுதையின் விஞ்ஞானப் பெயர் ஈக்குவஸ் முலஸ். ஆயுட்காலம், 50 ஆண்டுகள்.

குதிரை - கழுதை - கோவேறு கழுதை மூன்றுமே சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் போல... பெண் குதிரைக்கும், ஆண் கழுதைக்கும் பிறப்பதே கோவேறு கழுதை. கோவேறு கழுதை, 99.99 சதவீதம் மலட்டுத்தன்மை உள்ளது.

கோவேறு கழுதைகள், குதிரையை விட நீண்ட நாள் வாழும் புத்திசாலி. எடை, 350 முதல், 450 கிலோ வரை இருக்கும். தமிழகத்தில், சங்க காலத்தில், கோவேறு கழுதையை, அத்தரி, பேசரி என்ற பெயர்களில் அழைத்தனர்.

கோவேறு கழுதையின் மேற்தோல் கடுமையான வெப்பத்தையும், மழையையும் தாங்கக் கூடியது. மலை பிரதேச சவாரிக்கு ஏற்றது. வித்தியாசமான குரல் வளம் உடையது.

மத்திய கிழக்கு நாடான ஜோர்டான், ஆப்ரிக்க நாடுகளான மொராக்கோ, டுனிஷியா, எத்தியோப்பியாவில், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவேறு கழுதைகள் பயன்பாட்டில் உள்ளன.

கோவேறு கழுதை ராணுவ பணிக்கு ஏற்றது. ஆசிய நாடான சீனா, கோவேறு கழுதை உற்பத்தியில் முதலிடமும், வட அமெரிக்க நாடான மெக்சிகோ இரண்டாவது இடமும் வகிக்கின்றன.

கோவேறு கழுதை பக்கவாட்டில் உதைக்கும் திறன் உடையது. 30 ஆண்டுகளுக்கு முன், சலவைத் தொழிலாளிகள் அழுக்குத்துணியை கட்டி பொதியாக சுமக்க கழுதைகளை பயன்படுத்தினர்.

கிராமத்தில், 'ஏழு கழுதை வயசாச்சு, சம்பாதிக்க துப்பில்லை...' என துாற்றுவர் பெரியோர். இது பற்றிய விளக்கத்தை பார்ப்போம்...

பொதி சுமக்க தயாரான கழுதையை, ஒரு வயது என வைத்துக் கொள்வோம். ஏழு பொதி சுமக்கும் கழுதை வயதாகியும் சொந்தமாக சம்பாதிக்க தெரியவில்லையே என்பது தான் இதன் பொருள்.

கழுதைப்பால் பண்ணை அமைப்பது பற்றி யோசனை கேட்டிருந்தாய்.

நல்ல யோசனை தான். திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே, துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில், 'தி டாங்கி பேலஸ்' என்ற பெயரில், பிரமாண்டமான கழுதை பண்ணை உள்ளது. இங்கு மகாராஷ்டிரா மாநிலம் கத்தியவாடி பகுதி கழுதைகளும், குஜராத் மாநிலம் ஹில்லாரி இன கழுதைகளும், தமிழக கழுதைகளும் வளர்க்கப்படுகின்றன.

முக அலங்காரம், தோல் பாதுகாப்பு பொருட்கள் செய்ய கழுதைப்பால் பயன்படுகிறது.

கால்நடை மருத்துவ படிப்பு முடித்த பின், தாராளமாக கழுதைப்பால் பண்ணை அமைக்கவும். மாபெரும் வெற்றி அடைவாய்; வாழ்த்துகள்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.






      Dinamalar
      Follow us