PUBLISHED ON : ஜூலை 06, 2024

என் வயது, 76; வங்கியில் சீனியர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். நீண்ட காலமாக, சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். பெயர் தான் சிறுவர்மலர் என்றுள்ளதே தவிர, எல்லா வயதினருக்கும் ஏற்றம் தர கூடியதாக உள்ளது.
பள்ளி பருவ நினைவுகளை, 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்களாக தந்து நினைவூட்டி மகிழ வைக்கிறது. தொடர்கதை நெஞ்சை நெகிழ வைத்து சந்தோஷம் தருகிறது. நவீன தகவல்களை தரும், 'அதிமேதாவி அங்குராசு' பகுதி அளவில்லா ஆனந்தமடைய செய்கிறது. தமாசுகளின் கூடாரம், 'மொக்க ஜோக்ஸ்' நன்கு சிரிக்க உதவுகிறது.
நாவுக்கு நல்லச்சுவை சேர்க்கும், 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்' பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்து சாப்பிட ஊக்குவிக்கிறது. எல்லா சிறப்புகளும் சேர்ந்து, ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு படிப்பினை தந்து, எடுத்துக்காட்டாக மலர்கிறது. சிறுவர்மலர் இதழ் சிறப்புடன் திகழ உளமார்ந்த வாழ்த்துகள்!
- ஏ.வி.சுதந்திரன், காரைக்குடி.
தொடர்புக்கு: 63835 37460