PUBLISHED ON : ஜூலை 13, 2024

என் வயது, 63; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை சில ஆண்டுகளாக படித்து வருகிறேன். அனைத்து பகுதிகளும் கவரும் வண்ணம் உள்ளன.
பள்ளி பருவத்து நினைவுகளை அசை போட வைக்கும், 'ஸ்கூல் கேம்பஸ்!' மிகவும் சுவாரசியம் தருகிறது. அதிமேதாவி அங்குராசு சொல்லும் அறிவு செய்திகள் மற்றும் சிறுகதைகள் அற்புதம். இவற்றை என் வீட்டருகே வசிக்கும் சிறுவர், சிறுமியருக்கு படித்து சொல்வேன். விரும்பி கேட்பர்.
இதழுக்கு சிகரம் வைத்தாற்போல், 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்' ரெசிபியை உடனே சமைத்து பகிர்ந்து மகிழ்வேன். அதில் கிடைக்கும் பாராட்டு என்ற சன்மானம் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.
சிறுவர், சிறுமியரை நல்வழிப்படுத்த உதவும் சிறுவர்மலர் இதழைப் படிப்பதும், மாடி தோட்டத்தில், பிரண்டை, கறிவேப்பிலை, சோற்றுக்கற்றாழை போன்ற தாவரங்கள் வளர்ப்பதும் மகிழ்ச்சியை பெருக்குகின்றன. சூப்பராக செய்திகளை தரும், சிறுவர்மலர் இதழின் அரும்பணி தொடர வாழ்த்துகள்!
- ராஜி, கும்பகோணம்.
தொடர்புக்கு: 88256 07898