PUBLISHED ON : ஜூலை 27, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 75; இல்லத்தரசியாக இருக்கிறேன். வெகுகாலமாக சிறுவர்மலர் வாசித்து வருகிறேன். சனிக்கிழமைகளில் இதழைப் படித்து விட்டு தான், அன்றைய வேலையை துவங்குவேன்.
இதில், அங்குராசு அளிக்கும் அபூர்வ தகவல்களை விரும்பி பிடிப்பேன். சிறுகதை மற்றும் படக்கதைகளை என் கொள்ளு பேரன்களுக்கு எடுத்துக் கூறுவேன். அதைக் கேட்டு அவர்கள் அடையும் மகிழ்ச்சி கண்டு பரவசமடைவேன்.
'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' பகுதியில் காணும் உணவு வகைகளை சமைத்து கொடுப்பேன். குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவது கண்டு மகிழ்வேன்!
சிறுவர்மலர் இதழை, அக்கம் பக்கத்தில் வசிப்போர் கேட்டு வாங்கி படிப்பர். எல்லாருக்குமான செய்திகளை அளித்தரும், சிறுவர்மலர் இதழை படிக்கும் போது மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறேன்.
- வேம்பு, சென்னை.
தொடர்புக்கு: 97875 11708