
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 66; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை, 10ஆண்டுகளாக படித்து வருகிறேன். இதழைக் கையில் எடுத்தவுடன் குழந்தை பருவத்தை அடைவது போல் மகிழ்கிறேன்.
பள்ளியில் படித்த நாட்களின் நினைவை கிளர்த்தி விடுகின்றன, 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள். மழலையர் கைவண்ணத்தை, 'குட்டி குட்டி மலர்கள்' ரசிக்க வைக்கிறது. அறிவியல் மற்றும் வினோத தகவல்களைத் தரும், அங்குராசு கட்டுரைகள் பிரமிப்பூட்டுகின்றன.
சிறுகதைகள் படிக்க படிக்க திகட்டுவதே இல்லை. அனைத்து வயதினருக்கும் ஆலோசனை சொல்லும், 'இளஸ்... மனஸ்' பகுதியில் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது. மனம் கவர்ந்திழுக்கும், சிறுவர்மலர் இதழை மனமார வாழ்த்துகிறேன்.
- ஏ.சுப்புலட்சுமி, கோவை.