
என் வயது, 31; தனியார் கல்லுாரியில், விரிவுரையாளராக பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை வாரம் தவறாமல் படிக்கிறேன்.
மாணவப் பருவத்தில், ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்தும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள் மேன்மையாக உள்ளன.
சிறியோர் மட்டுமின்றி, பெரியோரும் பின்பற்ற கூடிய நீதி போதனைகளை தாங்கி வரும் கதைகள், ஆச்சரியமூட்டும் அறிவுப்பூர்வ தகவல்களை தாங்கி வரும் பெட்டிச் செய்திகள், சக்கை போடு போடும், 'மொக்க ஜோக்ஸ்!' என, வாசிப்பால் மனதை கொள்ளை கொள்கின்றன.
அள்ளக்குறையா அன்புடன் வழங்கும், 'இளஸ்... மனஸ்...' தகவல்கள், ஒவ்வொரு வாரமும், கலைப் பொக்கிஷங்களாக கத்தரித்து பாதுகாக்கிறேன்.
கள்ளம் கபடமறியா, குட்டி குட்டி மலர்கள் புகைப்படங்கள் இறைவன் தந்த அருட்கொடையாக மிளிர்கின்றன. எப்போது, சிறுவர்மலர் இதழ் வரும் என ஏங்கி தவிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவர் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
- எஸ்.வி.கே.தீபிகப்பிரியா, கோவை.
தொடர்புக்கு: 98657 53262