
என் வயது, 85; புதுச்சேரி அரசில் சட்டத்துறை செயலராகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழை, 30 ஆண்டு காலமாக படித்து வருகிறேன். அதில் செய்திகள், நம்பகத்தன்மையுடன் வெளியாகின்றன.
இணைப்பாக வரும் சிறுவர்மலர் இதழை, முன் அட்டை முதல், கடைசி பக்கம் வரை, வரி விடாமல் தவறாமல் படித்து வருகிறேன். பல தகவல்கள் வியக்க வைக்கின்றன. கடந்த ஜூன் 3, 2023ல், 'உடல் இயக்கம் அறிவோம்!' என்ற தலைப்பில், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியில் வெளியான தகவல்கள், மிகவும் பயன்மிக்கதாக இருந்தன.
இது, அறிவூட்டும் மருத்துவ மலர் போல் உள்ளதால், பாதுகாத்து வைத்துள்ளேன். சீர், சிறப்புடன் தொண்டு செய்து வரும் சிறுவர்மலர் இதழால் அறிவு ஒளி பரவுகிறது. குழந்தைகள் முதல், பெரியோர் வரை விரும்பி படிக்கும் இனிய இதழுக்கு ராயல் சல்யூட். மக்களுக்கு பயன்படும் செய்திகள் தரும் சிறுவர்மலர் இதழ் வளர வாழ்த்துகிறேன்!
- வி.நாராயணசாமி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 79043 18281