
என் வயது, 56; சுகாதாரத்துறையில் செவிலியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். பணியில் பரபரப்பாக இருந்த சூழலிலும், சிறுவர்மலர் இதழை படிக்க தவறியதில்லை. பணி சார்ந்த மன அழுத்தத்திற்கு அருமருந்தாக இருந்து உதவுகிறது.
தற்போது, குடும்ப பாராமரிப்புடன், சிறுவர்மலர் இதழின் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து படிக்கிறேன். குறிப்பாக, 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள் மிகவும் சுவாரசியமாக படிப்பினை தரும் வகையில் உள்ளன. சமையல் குறிப்பு வழங்கும், 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்!' மிகவும் அருமை.
அறிவுரைகளை அள்ளித்தரும், 'இளஸ்... மனஸ்...' அறிவு நிறைந்ததாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும், 'தொடர்கதை!' படிக்க காத்திருக்கிறேன். ரசிக்க வைக்கும், 'படக்கதை!' மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவ, மாணவியரின் அற்புத படைப்புகள் நிறைந்த, 'உங்கள் பக்கம்!' நெஞ்சை கொள்ளை கொள்கிறது; மொத்தத்தில், சிறுவர்மலர் இதழ் ஒரு அறிவு பெட்டகமாக உள்ளது!
- சி.சாந்தி விஜயகுமார், சிவகங்கை.
தொடர்புக்கு: 90034 55907