
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 80; அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை நீண்டகாலமாக படித்து வருகிறேன். படித்து ஆனந்தம் அடைவோரில் நானும் ஒருவர் என கூறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதழில் அங்கமாக உள்ள அனைத்து பகுதிகளும் மனநிறைவு தருகின்றன. அதில், எவ்வித சந்தேகமும் இல்லை. சனிக்கிழமைகளில் சிறுவர்மலர் இதழ் படிப்பதால், என் பொழுது உபயோகமாக செலவாகிறது.
குடும்ப உறுப்பினர் அனைவரும் விரும்பி படிக்கின்றனர். அறிவை வளர்க்கும் சிறுவர்மலர் இதழை பொக்கிஷமாக பாதுகாக்கிறேன். சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சிக்கு வித்திட்டு அறிவை வளர்க்கும் பணியை செய்வதற்கு அன்பான வாழ்த்துகள்!
- எஸ்.கலாவதி, சென்னை.