
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 55; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழ், 'உங்கள் பக்கம்!' பகுதிக்கு, என் பேரனும், பேத்தியும் படம் வரைந்து அனுப்புவர்; அதில் பரிசும் பெற்றுள்ளனர். நான், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' உணவு செய்முறைகளை தயாரித்து குடும்பத்தினருக்கு கொடுத்து மகிழ்கிறேன்.
பொழுதை முறையாக பயன்படுத்த உதவுகிறது சிறுவர்மலர். அலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் பிடியில் இருந்து சிறுவர், சிறுமியருக்கு விடுதலை தருகிறது. ஒவ்வொரு வாரமும் தவறாமல் படிப்பதால் அறிவு வளர்கிறது. எளிய நடையில் இருப்பதால் படிக்க உகந்ததாக உள்ளது.
சிறுவர், சிறுமியர் முன்னேற வழியமைத்து நற்பண்பு, ஒழுக்கம் வளர்க்கும் சிறுவர்மலர் இதழ் மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறேன்.
- ஞா.சிவகாமி ஞானசேகர், சென்னை.