sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (20)

/

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (20)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (20)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (20)


PUBLISHED ON : டிச 14, 2024

Google News

PUBLISHED ON : டிச 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: வளர்ப்பு மிருகம் மீதான ஆர்வத்தால், காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை, தத்தெடுத்தான் சிறுவன் மகிழ். அதன் பயிற்சியாளராக இருந்த காண்டீபன் பிரிய மனமின்றி அதை கடத்தி சென்றான். அது, அவனுடன் ஒத்துழைக்க மறுத்ததால் திறந்து விட்டான். மகிழ் வசித்த குடியிருப்புக்கு அது திரும்பியது. இனி -

காவலாளி கூண்டின் அருகில் இருந்து, உச்சபட்ச ஒலியில் முறையிடும் விதமாய் குரைத்தது செங்கிஸ்கான்.

சோர்ந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மகிழை, அந்த குரைப்பு சத்தம் உசுப்பியது.

'இது செங்கிஸ்கான் குரலாச்சே... திரும்பி வந்து விட்டதா' என எண்ணியபடி கதவை திறந்தான்.

வெளியே, செங்கிஸ்கான் நிற்பதை பார்த்தான்.

''செல்லக்குட்டி...''

கட்டி அணைத்தான் மகிழ்.

முன்னங்கால்களை உயர்த்தி, முழு உடலை நிமிர்த்தி ஆர்வமாக நின்றது செங்கிஸ்கான்.

''உனக்கு ஏதும் காயம் படவில்லையே...''

செங்கிஸ்கானின் உடல் முழுதையும் தடவி பார்த்தான் மகிழ்.

'எனக்கு ஒன்றும் இல்லை...'

''உன்னை கடத்தி சென்ற காண்டீபனை ஏதாவது காயப்படுத்தினாயா... எங்கு அழைத்து சென்றிருந்தார்...''

தலையை உயர்த்தி நீட்டி, 'ரொம்ப துாரம் அழைத்து சென்று ஒரு மலைப்பிரதேசத்தில் வைத்திருந்தார்...' என்றது செங்கிஸ்கான்.

''நீ திரும்பி வந்து விடுவாய் என தெரியும். அதனால், காண்டீபன் மீது எந்த புகாரும் அளிக்கவில்லை...''

'நன்றி...'

''காண்டீபன் இடத்தில் நான் இருந்தாலும், இது மாதிரி கடத்தி சென்று இருப்பேன்...''

'அவருக்காக பரிந்து பேசாதே... என்னை சங்கிலி போட்டு கட்டி, துப்பாக்கியால் சுட பார்த்தார்; கட்டையால் அடிக்க முயன்றார். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் காப்பாற்றினார் இறைவன்...'

''எங்கிருந்து ஓடி வருகிறாய்...''

'நீண்ட துாரத்தில் இருந்து...'

தலையை உயர்த்தி நீட்டி ஊளையிட்டது செங்கிஸ்கான்.

அந்த நேரம் -

குடியிருப்பில் வசிக்கும் சிறுவர், சிறுமியருடன் வந்தார் அடுக்குமாடி குடியிருப்பின் செயலர்.

செங்கிஸ்கானை அசூயையாக பார்த்து, ''ஓடுகாலி... வந்து விட்டது...'' என்றார்.

''செயலரே... அவதுாறு பேசாதீர். கடத்தியவர்களிடம் இருந்து, சாமர்த்தியமாக தப்பி வந்துள்ளது செங்கிஸ்கான்...''

'மகிழ்... செங்கிஸ்கான் வருகையை முதலில், நாங்கள் கொண்டாடினோம். அது எண்ணற்ற பிரச்னைகளை இழுத்து வருகிறது. மீண்டும், இங்கு அதை தங்க அனுமதித்தால், குடியிருப்பு ரத்தக் காடாய் மாறி விடும்; இனி, ஒரு கணம் கூட இங்கு இருக்கக் கூடாது. இதை தத்து கொடுப்பீரோ இல்லை, கையோடு கூட்டிட்டு வேறொரு வீட்டுக்கு சென்று விடுவீரோ... நல்ல ஒரு முடிவு எடுக்கவும்...' என்றனர் சிறுவர், சிறுமியர்.

''நீங்களாக சிந்தித்து இப்படி சொல்கிறீர்களா... அல்லது யாராவது சொல்லி கொடுத்ததை பேசுகிறீர்களா...''

'மகிழ்... எங்களுக்கு சுயபுத்தி இருக்கிறது...'

''செங்கிஸ்கான், 15 குட்டிகளுடன் இருந்த பாம்பு ஒன்றை கண்டுபிடித்தது. தெரு நாய்களின் தொந்தரவை அடியோடு நிறுத்தியது. அது தொடர்ந்து இங்கு இருந்தால், அடுக்குமாடி குடியிருப்பின் நலனுக்காக நிறைய நற்காரியங்களை சாதித்து காட்டும். ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பர். இதை இங்கிருந்து துரத்தி விட்டு என்ன சாதிக்கப் போகிறீர்...''

'மகிழ்... இப்படி வாயாலேயே வடை சுடு...'

அப்போது, மகிழின் அலைபேசி சிணுங்கியது.

காதில் பொருத்தினான்; எதிர்முனையில் காண்டீபன்.

''மகிழ்... செங்கிஸ்கான் பத்திரமாக குடியிருப்புக்கு வந்து சேர்ந்து விட்டதா...''

''வந்து விட்டது. நடந்ததை விபரமாக கூறுங்கள் காண்டீபன்...''

முழுதும் விவரித்த காண்டீபன், ''மயக்க மருந்தால், உங்கள் குடும்பத்துக்கு எந்த ஆபத்தும் இல்லையே... மிகப் பெரிய குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்தேன்...'' என வருத்தத்தை தெரிவித்தான்.

''நடந்தது எல்லாம், நல்லதுக்காக இருக்கட்டும். மருத்துவ விடுப்பை ரத்து செய்து, நாளை முதல் பணிக்கு செல்லுங்கள்...''

''என்னிடம் இருப்பதை விட செங்கிஸ்கான், உன்னிடம் இருப்பது தான் பொருத்தம். அதற்கான தகுதி உங்களிடம் தான் இருக்கு...''

''நன்றி...''

அலைபேசி இணைப்பை துண்டித்தான் மகிழ்.

பின், கைகளை நீட்டி, 'செங்கிஸ்கானே திரும்பிப் போ' என்ற பேனரை சுட்டியபடி, ''இதை வைக்க சொன்னது செயலர் தானே...'' என்றான்.

தயக்கத்துடன், 'ஆமாம்...' என்றனர் சிறுவர், சிறுமியர்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே குடியிருப்பில் ஒரு வீட்டுக்குள் ஓடியது செங்கிஸ்கான்.

அங்கு இருந்தோரை வெளியே இழுத்து வந்து நிறுத்தியது. வீட்டின் ஜன்னல் கதவுகளை அவசரமாய் திறந்தது.

செங்கிஸ்கானை பின் தொடர்ந்து ஓடிய மகிழ், 'சருட்... சருட்...'டென மூக்கை உறிஞ்சினான்.

''ஐயோ... சமையல் எரிவாயு கசிகிறது...''

சிலிண்டரில் பாதுகாப்பு தொப்பியை எடுத்து பொருத்தினான். ரெகுலேட்டரையும், பர்னரையும் மூடி, சமையலறை மின் உபகரணங்கள் செயல்பாட்டை நிறுத்தினான். பின், எல்.பி.ஜி., டீலருக்கு புகார் செய்தான்.

'எங்கள் உயிரை காப்பாற்றி உள்ளாய் செங்கிஸ்கான்... இனி யார் வந்து, உன்னை விரட்டி அடித்தாலும், குறுக்கே விழுந்து தடுப்போம். எங்களை ரட்சிக்க வந்த காவல் தெய்வம் நீ...'

கட்டியணைத்து, ஆனந்த கண்ணீர் வடித்தனர் தப்பியோர்.

மகிழ்ச்சியில் செங்கிஸ்கான் மீது விழுந்து புரண்டனர் சிறுவர், சிறுமியர்.

அப்போது -

'செங்கிஸ்கான் அடுத்த முறை, 'கிளீன் போல்டு' ஆகும். அதை யாராலும், தடுக்க முடியாது...'

இரு ரத்த நிறக் கண்கள், கொடூரமாக முறைத்தன.



- தொடரும்...

- ஆர்னிகா நாசர்







      Dinamalar
      Follow us