
என் வயது, 60; குடும்பத் தலைவியாக இருக்கிறேன். பாவாடை தாவணி அணிந்த காலத்திலிருந்து, தினமலர் நாளிழை விரும்பி படித்து வருகிறேன். இணைப்பாக வரும் சிறுவர்மலர் இதழை ஆர்வமுடன் ஒரு வார்த்தை விடாமல் படித்து விடுகிறேன்.
இதில் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பள்ளி அனுபவங்களை படிக்கும் போது, இளமை நினைவை துாண்டுகிறது. அதுபோன்ற அனுபவத்தை எழுதி அனுப்ப வைக்கிறது. சிறுவர், சிறுமியருக்கு நல்ல படிப்பினையை, 'சிறுகதைகள்!' புகட்டுகிறது. மூளைக்கு, 'புதிர்!' பகுதி வேலை வைத்து, அறிவை கூர்மையாக்குகிறது.
தமாசுகள், 'மொக்க ஜோக்ஸ்!' பகுதியாகி கற்பனையை துாண்டுகிறது. சமையல் குறிப்பு, 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்!' உணவுகளை தயாரிக்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. குழந்தைகளின் புகைப்படங்கள், குட்டி குட்டி மலர்களாக இதயத்தில் புன்னகை வார்க்கிறது.
மாறுபட்ட செய்திகள், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியில் வந்து நெஞ்சில் நிலைத்து விடுகிறது. மாணவர்கள் வரையும், 'உங்கள் பக்கம்!' ஒவ்வொருவரையும் ஓவியராக மாற்றி விடுகிறது. வாழ்வை வளமாக்கும், 'இளஸ்... மனஸ்...' நலமுடன் வாழ துாண்டுகிறது. விமர்சனங்களை, 'வாசகர் பகுதி!'யில் தெரிவிக்க தடை ஏதும் இல்லை. ஒவ்வொரு வாரமும் மெருகேறி வரும், சிறுவர்மலர் இதழை மனதார பாராட்டி வாழ்த்துகிறேன்!
- ஆர்.உமா, ஈரோடு.
தொடர்புக்கு: 95782 03618