
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 67; தமிழக மின்வாரியத்தில் வருவாய் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படித்து ரசிக்கிறேன்.
இதில், சிறுகதைகள் சிந்தனையை விட்டு அகல்வதில்லை. நீண்ட நாட்களுக்கு முன் படித்த ஏழை சிறுமி வாங்கும் மத்தாப்பு பற்றிய கதை என் நினைவில் இன்றும் உள்ளது. அந்த கதை என்னை ஆன்மிக பாதையில் அழைத்து சென்றது. இரக்கத்தை விதைத்தது.
சிறுவர்மலர் இதழில் வரும் அனைத்து படைப்புகளும் நம்பிக்கையை உருவாக்குகின்றன. என் பேரன், பேத்தியர் எத்தனையோ கார்ட்டூன் படங்களை, 'டிவி'யில் பார்க்கின்றனர். ஆனால், சனிக்கிழமையானால், சிறுவர்மலர் இதழில் வரும் கதைகளை நான் சொல்ல கேட்க தவறுவதே இல்லை!
- ரேவதி, சென்னை.
தொடர்புக்கு: 94438 55108