PUBLISHED ON : பிப் 08, 2025

என் வயது, 43; இல்லத்தரசியாக இருக்கிறேன். அடிக்கடி வீட்டிற்கு வரும் குடும்ப நண்பர், சிறுவர்மலர் இதழ்களை எல்லாம் சேர்த்து தொகுப்பாக கொடுக்க கேட்டார். அதன்படி கொடுத்து வந்தேன்.
ஒருநாள் அதன் பயன்பாடு பற்றி கேட்டேன். அப்போது, 'என் மனைவி ஆசிரியையாக இருக்கிறார். சிறுவர்மலர் இதழில் வரும் படைப்புகளை தொகுத்து, வகுப்பில் பாடமாக நடத்துகிறார்...' என்று கூறினார். அது நெகிழ்வூட்டியது.
அது முதல் நானும் தீவிரமாக வாசிக்க துவங்கினேன். சிறுவர்மலர் இதழில், ஸ்கூல் கேம்பஸ், அதிமேதாவி அங்குராசு, சிறுகதை, ஹெல்த் கிச்சன், உங்கள் பக்கம் என, எல்லா பகுதிகளும் பயன் தருவதாக இருக்கின்றன. சிறுவர், சிறுமியர் அறிவு வளர்ச்சிக்கு உதவும் ஆக்கங்கள் அவை.
முதியோர் சொல்லும் அனுபவ பாடங்கள் பயன் தருகிறது. அனைத்து வயதினரும் விரும்பும் அறிவுப்பெட்டகமாக மலர்கிறது. சிறுவர்மலர் இதழ் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
- எம்.ஹேமலதா, மதுரை.
தொடர்புக்கு: 98421 84523