PUBLISHED ON : பிப் 22, 2025

என் வயது, 30; தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். சிறு வயதிலிருந்தே சிறுவர்மலர் இதழைப் படித்து வருகிறேன். இதில் இடம் பெறும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள், வழிகாட்டியாகவும், ஆசிரியர் - மாணவர் உறவை வளர்க்கவும் உதவியாகவும் இருக்கின்றன.
சிறுகதைகள், நன்னெறியை போதிப்பதால், வகுப்பில் மாணவர்களையும், வீட்டில் மகன், மகளையும் நல்வழிப்படுத்த உதவுகின்றன. தொடர் கதை, படக்கதை, உங்கள் பக்கம் ஓவியங்கள், புதிர், மொக்க ஜோக்ஸ், மம்மீஸ் ெஹல்த் கிச்சன், அதிமேதாவி அங்குராசு என, அனைத்து பகுதிகளும் பயன்மிக்கது.
வாசிப்பு இன்பத்தை வழங்கி இதயத்தில் மேலான இடம் பிடித்திருக்கிறது சிறுவர்மலர் இதழ். தமிழைப் பிழையின்றி வாசிக்க, எழுத விரும்பும் ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதமாக திகழ்கிறது!
- வி.நர்மதா, உளுந்துார்பேட்டை.
தொடர்புக்கு: 97156 40263