தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜன 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 67; என் கணவரின் வயது, 75. சென்னையில் வசித்து, தற்போது 15 ஆண்டுகளாக எங்கள் மகளுடன், பெங்களூரில் வசிக்கிறோம். எங்களுக்கு ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.

எப்போதுமே, எங்களுக்கு சிறுவர்மலர் இதழ், ஒரு துணையாக திகழ்ந்து வருகிறது. சனிக்கிழமையன்று, சிறுவர்மலர் இதழுக்கு எங்கள் வீட்டில் சிறப்பான வரவேற்பு காத்திருக்கும்.

முன் அட்டை மற்றும் பின் அட்டையில் கள்ளமில்லாத அழகுடன், புன்னகை பூக்கும் குழந்தைகளின் முகங்களை பார்த்துமே மகிழ்ச்சி ஏற்படும். பரிசுகளை தாங்கி வரும், அறிவைத் துாண்டும் போட்டிகள், குடும்பத்தில் அனைவரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் இடம் பெறும் கடிதங்கள், பள்ளி, கல்லுாரி கால சிறப்பு அனுபவங்களை நினைவுக்கு கொண்டு வருகின்றன. படக்கதை, மொக்க ஜோக்ஸ் போன்றவை, குழந்தைகளுக்கு மட்டுமின்றி வயதானோரின் மனங்களையும் கொள்ளை கொள்கின்றன. 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதியில் இடம் பெறும் குறிப்புகள், எளிமையாக சமைக்க உதவுவதோடு, ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும் கற்றுத்தருகிறது.

பல முக்கிய தகவல்களுடன் ஒரு அறிவுக்களஞ்சியமாக வெளிவரும் சிறுவர்மலர் இதழுக்கு, என் வாழ்த்துகளும், வணக்கங்களும்.



- பத்மினி ராமானுஜன், பெங்களூரு.

தொடர்புக்கு: 98866 42690


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us