தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : மார் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 40. தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறேன். சிறு வயது முதல், சிறுவர்மலர் இதழின் வாசகி. அதில் வரும் கதை, கட்டுரைகளை ஏற்ற, இறக்கத்துடன் குடும்பத்தினருக்கும், தோழிகளுக்கும் வாசித்துக் காட்டுவேன்.

இப்போதும் இதையே, வேறு மாதிரியாக பின்பற்றுகிறேன். ஒவ்வொரு வாரமும், சிறுவர்மலர் இதழ் வந்ததும், முதலில் நான் தான் படிப்பேன். திங்கள் கிழமையன்று பள்ளிக்கு எடுத்து சென்று, மாணவ - மாணவியருக்கு கதைகள், கட்டுரைகளை படித்து காட்டுவேன். மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்க, சிறுவர்மலர் சிறுகதைகள் உதவுகின்றன.

என்னை போலவே மாணவர்களும் படக்கதை, மொக்க ஜோக்ஸ், புதிர் பகுதி போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். துணுக்குகள் வாயிலாக, புதுப்புது தகவல்களை தெரிந்து கொள்கின்றனர். மாணவர்களின் படம் வரையும் திறனை, மழலையர் பக்கம் பகுதி வளர்த்து வருகிறது. தொடர்ந்து எங்களை, சிறுவர்மலர் இதழ் மகிழ்விக்க வேண்டுகிறேன்.



-- எஸ்.கவிதா, காஞ்சிபுரம்.

தொடர்புக்கு: 99526 24008


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us