PUBLISHED ON : மார் 28, 2026

என் வயது, 72. பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை, 20 ஆண்டுகளாக விரும்பி படித்து, பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். என் பேரன், பேத்திகள் அந்த இதழ்களை, இப்போதும் படித்து மகிழ்கின்றனர்.
'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள், பள்ளிப் பருவ நினைவுகளை நெஞ்சில் நிழலாட வைக்கின்றன. வருங்கால ரவிவர்மாக்கள் தீட்டும் வண்ண ஓவியங்கள், கண்களை கவர்கின்றன. முகம் மலர்ந்த, 'குட்டி குட்டி மலர்கள்!' அகம் குளிர வைக்கின்றன. 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்' ஆரோக்கியம் காக்கிறது.
'புதிர் போட்டிகள்' அறிவை வளர்க்கின்றன. 'சிறுகதைகள்' நீதியை போதிக்கின்றன. 'மொக்க ஜோக்ஸ்' வாய்விட்டு சிரிக்க வைக்கிறது.
சிறுவர்களுக்கு ஆசானாகவும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், பெரியவர்களுக்கு உற்ற தோழனாகவும் விளங்குகிறது, சிறுவர்மலர். வாரம்தோறும் குறிஞ்சி மலராய் மலர்ந்து, இல்லம் தோறும் மணம் பரப்பும் சிறுவர்மலர், இன்று போல் என்றும் சிறப்புற மனதார வாழ்த்துகிறேன்.
- கே.கணேசன், சென்னை.
தொடர்புக்கு: 97890 98818
