PUBLISHED ON : ஏப் 25, 2026

என் வயது, 26. ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சிறு வயது முதலே, சிறுவர்மலர் இதழை விரும்பி படிக்கிறேன். 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, பள்ளி நாட்களை நினைவுபடுத்துகிறது.
கேந்திரிய வித்யாலயாவில் படித்த எனக்கு, தமிழ் சொல்லிக் கொடுத்த முதல் ஆசான், சிறுவர்மலர் தான். சனிக்கிழமை வந்து விட்டால், எங்கள் வீட்டில் சிறுவர்மலர் இதழுக்கு போட்டி தான்.
'இளஸ் மனஸ், மொக்க ஜோக்ஸ், மம்மீஸ் ஹெல்தி கிச்சன்' பகுதியை மிகவும் ரசித்து
படிக்கிறேன். 'குட்டி குட்டி மலர்கள்' பகுதியில், குழந்தைகளின் படங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. நன்றாக வரையும் குழந்தைகளை ஊக்குவிக்கும் மேடையாக, 'மழலையர் பக்கம்' திகழ்கிறது.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், 'சுட்டீஸ் கையெழுத்து' பகுதி சிறுவர்மலரில் இல்லையே என, ஏங்க வைக்கிறது. நகமும், சதையும் போல, சிறுவர்மலர் என்னுடன் பின்னி பிணைந்து இருக்கிறது. சிறுவர்மலர் இதழ் மென்மேலும் பொலிவுடன் உயர்ந்திட வாழ்த்துகிறேன்.
சி.திலீப் விஸ்வராஜ், சென்னை.
தொடர்புக்கு: 99400 31639
