தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ வீ டூ லவ் சிறுவர்மலர்!

 வீ டூ லவ் சிறுவர்மலர்!

 வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : மே 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 58. திருமணத்திற்கு பிறகும் சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். என் கணவர், மாமியார் உள்பட குடும்பத்தினர் அனைவரும், ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர்மலர் இதழுக்காக காத்திருக்கிறோம்.

நான் ஒரு சிறப்பு ஆசிரியர்; கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, வீட்டிலேயே பாடம் எடுத்து வருகிறேன்.

சிறுவர்மலர் இதழில், 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்களை மாணவர்களுக்கு படித்துக் காட்டி, தங்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களை நினைவில் போற்ற வேண்டும் என, அறிவுரை கூறுவது என் வழக்கம். அவர்களுக்கு சிறுகதைகளை படித்துக்காட்டி, அதில் உள்ள நீதியையும் விளக்குகிறேன். 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதியில் வரும் ஆரோக்கிய உணவு வகைகளை, நானே செய்து மாணவர்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறேன்.

சிறுவர்மலர் இதழில், 'மழலையர் பக்கம்' ஓவியங்களை காட்டி, என் மாணவர்களின் கற்பனை குதிரையை தட்டி, அவர்களையும் வரைய வைக்கிறேன். எனக்கும், குடும்பத்தினருக்கும் மட்டுமின்றி, என் மாணவர்களுக்கும் வழிகாட்டியாக திகழ்கிறது, சிறுவர்மலர். மேலும், மேலும் புதிய அம்சங்களுடன், மொட்டும் - மலருமாக, காயும் - கனியுமாக சிறுவர்மலர் பூத்துக் குலுங்க வாழ்த்துகிறேன்.



- பிரீத்தி ரெங்கசாமி, சென்னை.

தொடர்புக்கு: 94443 81298


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us